Govind Gopal
Candidate for the post of VP Culturalஅறிமுகம்
2005 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து தொண்டு செய்து வருகிறேன்.
கலிபோர்னியா தமிழ் பள்ளியில் 10-வருடங்களாகத் தமிழாசிரியர் சேவை.
2015-ல் பேரவை விழாவில் (FeTNA) பல குழுக்களில் குறிப்பிடத்தக்க சேவைகள்.
2015-ல் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள மீட்பு பணிக்கு தன்னார்வலராக நிதி திரட்டல்.
2016-ல் தமிழ் மன்றத்தின் சித்திரை உணவுத் திருவிழாக் குழுவில் பங்களித்துள்ளேன்.
2017-ல் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டி உள்ளேன்.
2017-ல் தமிழ் மன்ற Membership Lead பொறுப்பேற்று தமிழ் மன்ற வரலாற்றில் முதன் முதலாக அதிக உறுப்பினர்களை சேர்த்து உள்ளேன்.இந்த எண்ணிக்கை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
2017-ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட 190-மணி நேரம் தமிழ் மன்ற தன்னார்வ தொண்டு.
2017-ல் Monthly Tech-Meetup என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, மன்றத்தில் Members Benefits அதிகரிப்பு.
2010,2015,2019 தமிழ் மன்ற பட்டிமன்றங்களில் பேசி உள்ளேன்.
வளைகுடாப்பகுதி குழந்தைகளுக்கு ஓய்வு பெற்ற முதியவர்/தன்னார்வலர்கள் உதவியுடன் இலவச திருக்குறள் வகுப்பு நடத்தி வருகிறேன்.
2020-ல் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களையும் & Event Sponsors-யும் அறிமுகம் செய்துள்ளேன்.
2020-ல் பொங்கல் விழாவில் உணவுக் குழுவில் பங்களித்துள்ளேன். திருவள்ளுவர் சிலை குழுவில் பங்கேற்பு.
என்னை 2021 VP - Cultural பதவிக்கு தேர்வுச் செய்தால்,
தமிழ்ப் பயிற்சி பட்டறை என்ற அமைப்பில் தன்னார்வலர்கள் மூலம் பறை, பரதம், சிலம்பு, ஓவியம், திருக்குறள், வாய் பாட்டு, யோகா ஆகியவற்றை இலவசமாக கற்றுத்தர ஏற்பாடு செய்வேன்.
மாதம் தோறும் இலக்கிய கூட்டம் நடத்தி, அதில் திருக்குறள் "அறத்துப்பால் அறிவோம்" என்ற தலைப்பில் தமிழறிஞர்கள் / தமிழ் நாட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்/புலவர்கள் ஆகியோரை உரை ஆற்ற வைப்பேன்.
வளைகுடாப்பகுதிக்கு புதிதாக வரும் தமிழர்களுக்காக "New Comers Meetup".
தமிழ்மன்ற உறுப்பினர்களுக்கு அவசர உதவிக்குழு 24x7 சேவை.
இலவச சித்த மருத்துவம்.
இயல், இசை, நாடகம் இவற்றுடன் தமிழர்களுக்கான சேவைகளை பெருக்கி தமிழ் மன்றத்தை உயர்த்துவேன்.