Gunasekaran Pathakkam
Candidate for the post of Presidentவணக்கம்!
நான் குணசேகரன் பதக்கம். வளைகுடாப்பகுதியில் 21 ஆண்டுகளாக மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறேன். விசா நிறுவனத்தில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வருகிறேன்.
தமிழ் மன்றத்தில் எனது பணி:
2013- நீட்டிக்கப்பட்டகுழுவில் மக்கள் தொடர்பாளாராகவும், சட்டதிட்டங்கள் திருத்தியமைக்கும் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினேன். முதன்முறையாக இரத்ததான முகாம் தொடங்கினேன்.
2014- செயலாளர் பொறுப்பேற்று 2015-ம் ஆண்டு பெட்னா விழா வருவதற்கான பல கலந்துரையாடல், செயற்பாட்டுக்குழுக்கள் அமைக்கும் பணியில் முக்கிய பங்காற்றினேன்.
2015- பெட்னா வழிநடத்தும்குழு உறுப்பினர் (Steering Committee), அரங்கம் ஏற்பாடு செய்யும் பணி, பல குழுக்களை ஒருங்கிணைத்து நிகழ்வுகள் குறித்து தன்னார்வலர்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்தல் மற்றும் உணவுக்குழுத்தலைவராகவும் பணியாற்றினேன்.
2015 - 2016: வெள்ள நிவாரணக்குழுத்தலைவராக இருந்து எண்ணற்ற தன்னார்வலர்களின் உதவியால் நாற்பதுக்கும் மேற்பட்டத்திட்டங்களை செவ்வனே செய்தது.
2017- மன்றத்தலைவராக பொறுப்பேற்று பல்வேறு மக்களுக்கானச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். குறிப்பாக, வேலைவாய்ப்பு, தோட்டம், யோகா மற்றும் அவசரகாலச்சேவைகள் குறிப்பிடத்தக்கது.
ஆர்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க 350 ஆயிரம் வெள்ளிகளுக்கும் மேலாக குறைந்தகாலத்தில் உறுப்பினர்களின் ஆதரவோடும், பதினைந்துக்கும் மேற்பட்ட வளைகுடாப்பகுதி தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றினோம்.
2018-லிருந்து இன்றுவரை மன்றத்தின் நிவாரணக்குழு அங்கத்தினராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
சமூகசேவை :
தமிழ்ப்பள்ளியில் 12 வருடங்களாக (உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கும்) ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிறிக்கிறேன்.
CIF நிதிதிரட்டும் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடுவராக பணியாற்றியிருக்கிறேன்
2021 நோக்கம்:
எனது பணி மக்களை ஒன்றிணைக்கும் வகையில் மட்டுமே இருக்கும். உதவி மட்டுமன்றி அவர்களின் குரலுக்கும், எண்ணத்திற்கேற்ப மன்றநிகழ்வுகள் இருக்கும் என்பதினை உறுதி அளிக்கிறேன்.
மன்ற உறுப்பினர் அனைவருக்கும் “குழு காப்பீட்டுத்திட்டம்” கொண்டுவருதலுக்கு ஏற்பாடு செய்தல்.
கோவிட் 19 காலத்தில் மக்களின் அவசரத்தேவைகளை பூர்த்தி செய்தல்.
தமிழ் பண்பாட்டு மையத்திற்கு முறையான அமைப்பும் செயற்குழுவும் அமைத்தல்.
மன்றத்தின் சட்ட திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வருவது.
இளைஞர்களுக்காக ஓர் புதிய செயற்குழு அமைத்து அவர்கள் வருங்காலத்தில் மன்றத்தில் முக்கிய பங்குவகிக்க வகைசெய்தல்.