Sankar Natarajan
Candidate for the post of Secretaryதமிழ் மன்றத்தில் என் பங்கு :
2012 ம் ஆண்டு தமிழ் மன்றத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன்.
2014 ம் ஆண்டு வரை தமிழ் மன்றத்தின் அடிப்படை உறுப்பினராக இருந்து தமிழ் மன்றம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், பல திட்டங்களுக்கும் தொண்டாற்றியுள்ளேன்.
2015 ம் ஆண்டு தமிழ் மன்றம் நடத்திய பெட்னா விழாவில் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் , அந்த விழா செவ்வனே நடைபெற என்னால் முடிந்த தொண்டுகளைச் செய்தேன். அதே ஆண்டில், வெள்ள நிவாரண பணிகளுக்கு நிவாரணம் திரட்டவும் , செய்தி தொடர்பு பிரிவிலும் என் பணியை செய்தேன்.
2016 ம் ஆண்டு செயற்குழுவில் ‘அமைப்பாளர்/ஒருங்கிணப்பாளர்’ பொறுப்பேற்று என் பணியை செவ்வனே செய்தேன். இந்த பொறுப்பில் இருக்கும்போது எல்லாவிதமான தகவல் பரிமாற்றங்களையும் தமிழ் மன்ற மின்னஞ்சலின் உதவியுடன் செய்ததால் என் பின்னால் வந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு அது மிகவும் உதவியாக அமைந்தது.
2018ம் ஆண்டு செயற்குழுவில் ‘பொருளாளர்’ பொறுப்பிற்கு நம் தமிழ் மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
பொருளாளர் பொறுப்பில் இருந்த பொழுது செய்து முடித்த சில சாதனைகள்:
501(3)c Status reinstated for Tamil Manram in May, 2018
501(3)c Status approved for Tamil Cultural Center on January 31, 2018
Created Cashbook system using Google Sheets to speed up treasurer work.
தமிழுக்கு என் பங்கு :
2006ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழாசிரியராக தமிழை கலிஃபோர்னியாவில் வாழும் குழந்தைகளுக்கு கற்று கொடுத்து கொண்டு இருக்கிறேன்.
2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டு தன்னார்வ தொண்டர்களால் நடத்தப்படும் தமிழ் பள்ளிக்கு முதல்வராக பணியாற்றி நம் தமிழுக்கு என்னால் முடிந்ததை செய்தேன்.
தமிழ் மன்றம் நடத்திய பட்டி மன்றங்களில் கலந்துகொண்டு என் தமிழைப் போற்றினேன்.
ஒவ்வொரு வருடம் நடந்து வரும் திருக்குறள் போட்டிகளில் நடுவராக தன்னார்வ தொண்டாற்றினேன்.