Srinivasan Varippireddy
Candidate for the post of Convenerதமிழ் மன்றத்தில் என் பங்கு :
2016 ம் ஆண்டு தமிழ் மன்றத்தில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்தேன்.
2016 ம் ஆண்டில் தமிழ் மன்றத்தில் குழந்தைகள் பங்கேற்கும் இசை குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழ் மன்ற இசை குழு உருவாக என்னுடைய பெரும்பங்காற்றினேன்.
தமிழ் மன்றத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் என்னால் இயன்ற தொண்டாற்றி அந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தேன் .
செயற்குழுவில் பணியாற்ற என் விருப்பம் :
தமிழ் மன்றத்தில் நான் இருந்த காலங்கள் மிகக் குறைவே என்றாலும், அதன் செயல்பாடுகள், நோக்கங்கள் எனக்குப் பிடித்திருந்தது. அதனால், செயற்குழுவில் பணியாற்ற முடிவு செய்தேன்.
என்னைப் போன்ற புதியவர்கள் செயற்குழுவில் பணியாற்றினால் , புதிய சிந்தனைகளை செயல்படுத்தி பல மாற்றங்களை செய்ய முடியும்.
நாம் எல்லோரும் மிகப்பெரிய தொற்று நோய் காலத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில் , நம் சமுதாயத்தை மகிழ்விக்க இணையவழி மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்த முயன்று கொண்டிருக்கிறோம். என்னைப் போன்ற புதியவர்கள் நாம் எல்லோரும் சந்தித்து கொண்டிருக்கும் சவாலை மிகச் சிறப்பாக கையாள முடியும்.