தமிழ் மன்றத்தில் பங்களிப்பு
நான் கடந்த ஆகஸ்டு 2017 அன்று, தமிழ் மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தேன். அந்நாள் முதல், நான் பல தன்னார்வலர்களுடன், ‘அவர்களில் ஒருவனாக’ இணைந்து பல களப்பணிகளை ஆற்றி வருகிறேன். நான் பங்கெடுத்த முதல் நிகழ்வான, பொங்கல் விழா (2018) வில், உருவாக்கிய உழவர் அமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிறகு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்விலும், மேடை அலங்காரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, தன்னார்வலர்கள் உதவியுடன், பல புதுமையான அமைப்புகளை உருவாக்கினேன்.
(அவற்றுள் சில: அழகிய அலங்காரத்தூண்கள், 8 அடி உயர ஆலமரம், உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களை வைத்து உருவாக்கிய மேடை அலங்காரம், தவில் வாசிக்கும் நபர், கரகம் ஆடும் பெண்மணி, வாழைமர வாயில் தோரணம், எஸ்.பி.பி அவர்களின் 6அடி புகைப்பட அமைப்பு, எஸ்.பி.பி இசை நிகழ்வில் மேடை அலங்காரத்தில் பங்கு, 8x4அடியில் கீழடி அமைப்பு..)
அது மட்டுமல்ல, பல முக்கிய நிகழ்வுகளில் இறுதி வரை குடும்பத்துடன் நின்று தன்னார்வப் பணி ஆற்றியுள்ளோம். மேலும், தமிழ் மன்ற பொதுக்குழுக் கூட்டம் 2018 மற்றும் 2019 ‘நிகழ்வுகளின் குறிப்பு’ எடுக்கும் முக்கிய பொறுப்பினையும் செய்துள்ளேன். அது தவிர, விழிப்புணர்வு தரும் சில மேடை நாடகங்களையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த தெருக்கூத்தினையும் செய்துள்ளோம். சிறுவர்களை வைத்து சில நாடகங்களையும் ஏற்றியுள்ளோம்.
தன்னார்வலராக எனது பங்களிப்பு:
தமிழ் மன்றம் தவிர, 2018-இல் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான மொய்விருந்தில் களப்பணி ஆற்றினேன். மேலும், ITA தமிழ் பள்ளியில் குடும்பத்துடன் தன்னார்வ ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். கொரானா காலத்தில், சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து முகக்கவசம் உருவாக்கிக் கொடுத்தேன். மேலும் சில தன்னார்வ அமைப்புகளில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் களப்பணி ஆற்றி வருகிறேன்
தமிழ் மன்றத்தில், கலை அலங்காரத்தில் இன்னும் பல புதுமைகளையும், புதியவர்களின் எண்ணங்களையும் ஏற்றிடலாம் என்ற விருப்பத்தில் வின்ணப்பித்துள்ளேன்.