Udayabaskar Nachimuthu

Candidate for the post of Secretary

என் பெயர் உதயபாஸ்கர் நாச்சிமுத்து. வளைகுடாப்பகுதியில் IT துறையில் பணியாற்றிவருகிறேன்.

தமிழுக்கான பங்களிப்புகள்:

  • தமிழ்மன்றத்தின் விழுதுகள் இதழுக்கு மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். அதன்மூலம், சங்க இலக்கியம், திருக்குறள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அடுத்த தலைமுறைத் தமிழ் குழந்தைகளின் சாதனைகளை நேர்காணலாக வெளியிட்டிருக்கிறோம்.

  • சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” என்னும் வரலாற்றுப் புனைவுக்கு பிழைத்திருத்தம் செய்து கொடுத்திருக்கிறேன். தமிழ்மன்றத்தின் மேடையில் வேள்பாரி நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்ற திரைக்கதை உருவாக்குவதில் பங்கெடுத்து, உரையாடல் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

  • 2019 ஆண்டு நடைபெற்ற வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றத்தின் விழாவில் விழாமலர் அணியில் பணியாற்றி இருக்கிறேன்.

  • தமிழ்மன்றத்தின் முத்தமிழ் விழாக்களில் இலக்கியச் சொற்பொழிவுகளும், குழந்தைகளுக்கான திருக்குறள் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியும் நடத்தியிருக்கிறேன்.

  • 2019 ஆம் ஆண்டு தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் Bylaw குழுவில் பணியாற்றியிருக்கிறேன்.

தமிழ்மன்றத்துக்கான திட்டங்கள்:

கடந்த முப்பதாண்டுகளில் வளைகுடாப்பகுதியில் தமிழர் எண்ணிக்கை பெருகியுள்ளது. அடுத்த தலைமுறை வளர்ந்துகொண்டு வருகிறது. தமிழ்மன்றத்தின் தன்னார்வலர்கள், பொறுப்பேற்க முன்வருபவர்கள் என்று எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அதற்கேற்றவாறு, தமிழ்மன்றத்தின் நோக்கமும் செயல்பாடும் மாற்றியமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது:

  • துணைத்தலைவர் - பண்பாடு (Vice President - Cultural) என்ற பொறுப்புக்கு மாற்றாக, விழா, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம், உடல்நலம் (Health/Sports), ஆதரவு மையம் (Emergency/Support ) போன்ற புதிய பொறுப்புகளுக்கு தனித்தனியாகத் தலைமை.

  • உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல்

  • இளையோர் பங்களிப்பை அதிகரித்தல்

தேர்தல் உறுதிமொழி:

மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த உழைப்பதுடன், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கிச் சீர்தூக்கி, தமிழ்மன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

#RaisingTheBar