தமிழ்மன்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் வணக்கம்.
வினோத்குமார் என்கிற நான், தமிழ் மன்றத்தின் 2021-ஆம் ஆண்டிற்கான செயற்குழுவில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நான் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தன்னலமற்று, தமிழ் மன்றத்தின் நலனுக்காக, நேர்மையாக பணியாற்றி வருகிறேன். குறிப்பாக தமிழ்மன்ற இணையத்தளம் மேம்பாட்டிற்காகவும், இணையம் மூலமாக பணம் செலுத்தும் வசதிக்காகவும் பணியாற்றி உள்ளேன்.
மேலும், நான் அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) வில், 2017-ஆம் அண்டு முதல் செயலாற்றி வருகிறேன். இது மட்டுமல்லாது, பல இரத்த தான முகாம்களில் பங்கெடுத்துள்ளேன். முக்கியமாக லிவர்மோர் கோவில் நிர்வாகம் சார்பாக நடைபெறும் ஆங்கிலப் புத்தாண்டு விழாவில் உணவு வழங்கும் குழுவில் செயலாற்றி வருகிறேன். மேலும், ITA தமிழ் பள்ளி முதற்கொண்டு பல தன்னார்வ அமைப்புகளில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறேன்.
வருகிற தமிழ் மன்ற 2021 செயற்குழுவிற்கான தேர்தலில், பொருளாளராக தேர்ந்தெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நமது தமிழ் மன்றத்திற்கும், நம் வளைகுடாப் பகுதி தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.